அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

400 மில்லியன்: யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை!

யூடியூப் தளத்தில், தமிழ்ப் பாடல்களில் அதிகப் பார்வைகள்  பெற்ற பாடல் என்கிற சாதனையையும் சமீபத்தில் அடைந்தது...

News image
Updated On :18 ஏப்ரல் 2019, 9:31 am

எழில்

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இப்பாடலைக் கண்ட ரசிகர்கள் நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகளை அளித்துள்ளார்கள். 

பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அசத்தியது. இதனால் சர்வதேச அளவில் இப்பாடலின் விடியோவுக்குக் கவனம் கிடைத்தது. மேலும் யூடியூப் தளத்தில், தமிழ்ப் பாடல்களில் அதிகப் பார்வைகள்  பெற்ற பாடல் என்கிற சாதனையையும் சமீபத்தில் அடைந்தது.

தற்போது யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் 400 மில்லியன் அதாவது 40 கோடி பார்வைகளைப் பெற்று அசத்தியுள்ளது. இதனால் யூடியூபில் அதிகப் பார்வைகள் கொண்டதோடு இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் என்கிற பெருமையையும் அடைந்துள்ளது.  தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவான கொலவெறி பாடலும் சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவில் இடம்பெற்ற வச்சிண்டே பாடலும் முறையே 179 மில்லியன் பார்வைகளும் 196 மில்லியன் பார்வைகளும் பெற்றுள்ளன. அந்த எண்ணிக்கைகளைச் சுலபமாகத் தாண்டியுள்ளது ரெளடி பேபி பாடல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.