ரஜினி நடிக்கும் தர்பார்: புதிய தகவலைத் தெரிவித்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்!
ரஜினியை மிகவும் பாராட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்...


சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.
இந்நிலையில் ரஜினியை மிகவும் பாராட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். அவர் கூறியதாவது:
ரஜினி சாரிடமுள்ள அபாரமான வெளிச்சமும் அன்பும் அனைவரையும் சரிசமமாக எண்ணுகிறது. எவ்வித பாகுபாகும் இன்றி அனைவரையும் பொறுமையாக, மரியாதையாக நடத்துகிறார் என்று எழுதிய சந்தோஷ் சிவன், ஒரு ட்வீட்டுக்கான பதிலில், ஒரு பாடலில் ரஜினியும் நயன்தாராவும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட காட்சிதான் அப்பாடலின் சிறப்பே. பாடலின் இறுதிக்காட்சி அது. பிருந்தா அருமையாக நடனம் அமைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...