/

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள பிரபல புதுமுகம்!

‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி, தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகவுள்ளார்...

News image
Updated On :20 பிப்ரவரி 2019, 9:03 am

எழில்

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதி 2014-ல் விவகாரத்து பெற்றார்கள். இவர்களுடைய மகள் கல்யாணி. இவர், ஹலோ என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகுக்கு அறிமுகமானார். பிறகு தற்போது இரு தெலுங்குப் படங்களிலும் ஒரு மலையாளப் படத்திலும் நடித்துவருகிறார். 

இந்நிலையில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி, தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகவுள்ளார் கல்யாணி. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபோன்ற ஒரு தமிழ்ப் படம் மூலமாகத்தான் அறிமுகமாகவேண்டும் என எண்ணினேன் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கல்யாணி. 

இந்தப் படத்துடன் தற்போது மூன்று படங்களில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். எம். ராஜேஷ் இயக்கிய மிஸ்டர் லோக்கல் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். மே 1 அன்று மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 15-வது படமாக, மித்ரன் படம் தொடர்பான வேலைகளும் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.