ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

7-வது நாளில் ரூ. 150 கோடி வசூலைத் தொட்ட ஹிந்திப் படம்!

ரோஹித் ஷெட்டி இயக்கிய படங்களில் இந்தியாவில் ரூ. 100 கோடியை வசூலித்துள்ள எட்டாவது படம்...

News image
Updated On :4 ஜனவரி 2019, 11:50 am

எழில்

பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள படம் - சிம்பா. ரன்வீர் சிங், சாரா அலி கான், அபூர்வா மேத்தா போன்றோர் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 28 அன்று வெளியானது.

இந்தப் படம் வசூலில் அசத்தி வருகிறது. முதல் மூன்று நாள்களில் ரூ. 50 கோடியை இந்தியாவில் தொட்டது. 5-வது நாளில் ரூ. 100 கோடியைத் தாண்டியது இதன் வசூல். 7-வது நாளில் ரூ. 150 கோடியை எட்டியுள்ளது. வெளிநாடுகளில் முதல் வாரத்தில் இந்தப் படம் ரூ. 60 கோடியை வசூலித்துள்ளது. ரோஹித் ஷெட்டி இயக்கிய படங்களில் இந்தியாவில் ரூ. 100 கோடியை வசூலித்துள்ள எட்டாவது படம். இயக்குநர்களில் வேறு யாருக்கும் இவ்வளவு ரூ. 100 கோடி ஹிட் படங்கள் கிடையாது. ரன்வீர் படங்களில் இந்தியாவில் ரூ. 100 கோடியை எட்டியுள்ள நான்காவது படம் இது. 

இந்த வேகத்தைப் பார்க்கும்போது, சிம்பா படம் இந்தியாவில் மட்டும் நிச்சயமாக ரூ. 250 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018-ல் ரூ. 100 கோடியைத் தொட்ட 13-வது ஹிந்திப் படம் இது. 

இந்தியாவில் வரி நீங்கலாக ரூ. 300 கோடியை எட்டியுள்ள ஹிந்திப் படங்கள்: பிகே (2014), பஜ்ரங்கிபைஜான் (2015), சுல்தான் (2016), டங்கல் (2016), பாகுபலி 2 (2017), டைகர்ஜிந்தாஹை (2017), பத்மாவத் (2018), சஞ்சு (2018). இப்படங்களில் ரூ. 500 கோடியைத் தாண்டிய ஒரே படம் - பாகுபலி 2 (ஹிந்தி டப்பிங்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.