விஷாலைத் தொடர்ந்து ஆர்யாவுக்கும் திருமணமா? மணப்பெண் யார்?

இதோ இப்போது ஆர்யா தன்னுடன் கஜினிகாந்த் திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை சாயிஷா ஷேகலைத் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.
விஷாலைத் தொடர்ந்து ஆர்யாவுக்கும் திருமணமா? மணப்பெண் யார்?
Published on
Updated on
1 min read

ஆர்யாவும், விஷாலும் இரட்டையர்கள் என்று சொல்லத்தக்க அளவில் ஒருகாலத்தில் நெருங்கிய நண்பர்களாக உலா வந்தனர். எல்லாம் இயக்குனர் பாலாவின் கைவண்ணம். அவருடைய இயக்கத்தில் அவன் இவன் திரைப்படத்தில் நடிக்கையில் உண்டான நட்பு பிறகு இறுகிப் போய் இருவரும் சேர்ந்தே சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் திருமணம் குறித்த கேள்விக்கு விஷாலின் பதில், ஆர்யாவுக்குப் பிறகு தான் தனக்கு, என்பதாக இருந்தது. பிறகு ரூட் மாறி விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனார். சங்கத் தேர்தலுக்கு ஓட்டுச் சேகரிக்க சென்ற போது ஊடகங்களிலும், நண்பர்களிடமும் விஷால் பகிர்ந்து கொண்ட செய்தி நலிந்த கலைஞர்களுக்காக நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடித்த பிறகு அதில் அமையவிருக்கும் திருமண மண்டபத்தில் வைத்து தனது திருமணம் நடைபெறும் என்பதாக இருந்தது. இதோ கட்டடம் கட்டி முடிக்கப் பட்டதோ இல்லையோ தற்போது விஷாலுக்கு ஆந்திர தொழிலதிபரின் மகளுடன் திருமணம் எனும் செய்தி ஊடகங்களில் அடிபடத் தொடங்கி இருக்கிறது. இரட்டையரில் ஒருவரது நிலை இப்படி. அடுத்தவரான ஆர்யா... கடந்தாண்டில் கலர்ஸ் தொலைக்காட்சி மூலமாக தனக்கேற்ற மணப்பெண்ணைத் தேடவிருப்பதாக ஒரு அதிரடி ஆட்டம் ஆடி கிட்டத்தட்ட 17 மணப்பெண்களுடன் சுயம்வரம் நடத்தி மூவரை இறுதிச் சுற்றுக்கு கொண்டு வந்து கடைசியில் ஒருவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் எஸ்கேப்பானார். இதன் மூலமாக ஆர்யாவின் மணப்பெண் வேட்டை ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற பெயரில் சிறந்த பொழுதுபோக்குத் தொடராகி சில காலம் தமிழர்களின் வயிற்றில் பாலையும், நெருப்பையும் மாற்றி மாற்றி வார்த்து ஒருவழியாக முடிந்தது.

இதோ இப்போது ஆர்யா தன்னுடன் கஜினிகாந்த் திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை சாயிஷா ஷேகலைத் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.

ஆர்யாவைப் பொறுத்தவரை நிஜமாகவே திருமணம் முடிந்து ஊடகங்களில் புகைப்படம் வெளிவந்த பிறகு கூட அதெல்லாம் சும்மா ஷூட்டிங்குக்காக எடுத்ததுங்க என்று எஸ்கேப்பாகக் கூடிய அளவுக்கு அவரொரு தீராத விளையாட்டுப் பிள்ளை. எனவே இவர்கள் இருவருக்கும் திருமணம் என்பதை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்த பின்னரே உண்மை என நம்பமுடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com