தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

தோல்வியடைந்த படம்: மீதிச் சம்பளத்தைப் பெற மறுத்த சாய் பல்லவி!

படம் தோல்வியடைந்தாலும் சாய் பல்லவியின் மீதிச் சம்பளத்தைத் தர அவர் முயன்றுள்ளார். ஆனால்...

News image
Updated On :9 ஜனவரி 2019, 11:05 am

எழில்

ஷ்ரவானந்த், சாய் பல்லவி நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான தெலுங்குப் படம் - Padi Padi Leche Manasu. ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

ரூ. 22 கோடிக்கு வியாபாரமான இந்தப் படம் ரூ. 8 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக அறியப்படுகிறது. படக் கதாநாயகிக்கு ஒப்பந்தத்தில் சொன்ன சம்பளத்தில் ஒரு பகுதியை முதலில் கொடுத்த தயாரிப்பாளர், மீதமுள்ள ரூ. 40 லட்சத்தை பட வெளியீட்டுக்குப் பிறகு தருவதாக வாக்குறுதியளித்திருந்தார். இந்நிலையில் படம் தோல்வியடைந்தாலும் சாய் பல்லவியின் மீதிச் சம்பளத்தைத் தர அவர் முயன்றுள்ளார். ஆனால் தற்போதைய நிலைமையில் தன்னால் இந்தத் தொகையைப் பெற்றுகொள்ள முடியாது. வசூலில் நஷ்டம் ஏற்பட்டத்தில் தானும் பொறுப்பேற்பதாக சாய் பல்லவி தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். இதனால் இந்தப் பணத்தை சாய் பல்லவியின் பெற்றோரிடம் தர தயாரிப்பாளர் முயன்றுள்ளார். அவர்களும் அதை வாங்க மறுத்துள்ளார்கள். 

சாய் பல்லவியின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.