ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

விக்ரம் மகன் கதாநாயகனாக நடிக்கும் பாலா இயக்கியுள்ள வர்மா பட டிரெய்லர் வெளியீடு!

பாலா இயக்கியுள்ளார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்...

News image
Updated On :10 ஜனவரி 2019, 5:11 am

எழில்

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

இந்தப் படம் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. பிரபல இயக்குநர் பாலா இயக்கியுள்ளார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  வங்காள மொழியில் ஒரு படத்தில் நடித்துள்ள மேகா செளத்ரி, தற்போது தமிழ் திரையுலகுக்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். இவர், கதக் நடனத்தை முறையே கற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதியுள்ளார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன், வர்மா படத்துக்கும் இசையமைத்துள்ளார். அது அவருடைய 4-வது தமிழ்ப்படம். விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார்.

வர்மா படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.