/

ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை!

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் ஹாலிவுட் நடிகை ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :23 ஜூலை 2019, 9:19 am

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் ஹாலிவுட் நடிகை ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி, ரூ.400 கோடி பட்ஜெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கோமரம் பீம் ஆகியோரது சரித்திரப் பின்னணி கொண்ட ''ஆர்ஆர்ஆர்'' எனும் படத்தை இயக்கி வருகிறார். 

Story image

இதில், பிரபல தெலுங்கு நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கிறார்கள். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன் மற்றும் நாயகி அலியா பட் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Story image

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நாயகி எம்மா ராபர்ட்ஸ் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம் சரண் ஜோடியாக அலியா பட் இணைந்திருப்பதால், ஜூனியர் என்டிஆர் ஜோடியாக எம்மா ராபர்ட்ஸ் இணையவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

Story image

முன்னதாக பிரிட்டன் நடிகை டைஸி எட்கர் இக்கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அவர் திடீரென விலகினார். இதனால் பாலிவுட் நாயகிகள் ஷ்ரத்தா கபூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தி நெர்வ், தி பிளாக்கோட்ஸ் டாடர், பாலோ அல்டோ, வீ ஆர் தி மில்லர்ஸ், அடல்ட் வேல்ட், ஸ்க்ரீம் 4 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் எம்மா ராபர்ட்ஸ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.