எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விஜய் - ஷங்கர் படம் குறித்து தகவல் தெரிவித்த விக்ரம்!

விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்கவுள்ளார் என்று சமீபகாலமாகச் செய்திகள் வெளிவருகின்றன... 

News image
Updated On :25 ஜூலை 2019, 8:58 am

எழில்

விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்கவுள்ளார் என்று சமீபகாலமாகச் செய்திகள் வெளிவருகின்றன.

இந்நிலையில் இந்தச் செய்தியைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார் நடிகர் விக்ரம். மலையாள சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்படியும் ஒருவருடம் நடக்கும். எனக்கு ஆதித்ய கரிகாலன் என்கிற சுவாரசியமான கதாபாத்திரம். பொன்னியின் செல்வன் என்பது என்னுடைய கதாபாத்திரம் அல்ல. அது வேறொருவருடையது. இந்தப் படத்தில் எல்லோருக்கும் சமமான கதாபாத்திரங்கள் என்றவர் பிறகு ஷங்கர் படத்தில் நடிப்பது குறித்து கூறியதாவது: ஷங்கர், இப்போதுதான் ரஜினியுடன் இணைந்து ஒரு படம் செய்துள்ளார். அடுத்ததாக விஜய்யுடன் ஒரு படம் பண்ணலாம். பிறகு நாங்கள் இருவரும் ஒரு படத்தில் மீண்டும் இணையவுள்ளோம். ஷங்கர் சார் எப்போதும் என்னிடம் மீண்டும் வருவார். மணி ரத்னத்துடனும் மீண்டும் படம் பண்ணுகிறேன். இரு இயக்குநர்களும் இந்தத் துறையில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.