நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் ஜெயிக்க வேண்டும்: பாரதிராஜா விருப்பம்!
சாதிக்க வேண்டும் எனத் தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளேன்...


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனியில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை நியமிக்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாரதிராஜாவைத் தலைவராக்கும் தீர்மானத்துக்குப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள். இதையடுத்து, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிராஜா கூறியதாவது:
சாதிக்க வேண்டும் எனத் தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளேன். நடிகர் சங்கத் தேர்தலில் என் சிஷ்யர் பாக்யராஜ் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவருக்கு செயல்திறன், அறிவு, ஆற்றல் உண்டு. நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு வருவதற்கான முழுத்தகுதியும் உள்ளவர் பாக்யராஜ் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...