தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 69 பேர் போட்டி களத்தில் உள்ளனர். இரு அணியினரும் வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
விஷால் அணி சார்பாக தேர்தல் பிரசாரத்துக்காக விடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கத்தில் முறைகேடு செய்ததாகக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தனது தந்தையைத் தவறாகச் சித்தரித்ததற்குக் கண்டனம் தெரிவித்து நடிகை வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். உங்களுடைய இரட்டை வேடத்தையும் பொய்களையும் அனைவரும் அறிவார்கள். நீங்கள் புனிதர் என்றால் உங்களுடைய பாண்டவர் அணியிலிருந்து சிலர் வெளியேறி இன்னொரு அணியை உங்களுக்கு எதிராக உருவாக்கியிருக்க மாட்டார்கள் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார் வரலட்சுமி.
இந்நிலையில் விஷால் வெளியிட்ட பிரசார விடியோவுக்குக் கண்டனம் தெரிவித்து நடிகை ராதிகா சரத்குமாரும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சரத்குமார் தலைவராக இருந்தபோது எதையும் செய்யவில்லை என்றும் சங்கத்தில் முறைகேடாகச் செயல்பட்டார்கள் என்றும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி வேடிக்கையாக இருக்கிறது. விஷால் ரெட்டி அவர்களே, நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா? நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும்போது, முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உலகளாவிய விமான நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதில் சிக்கல்! பயணிகள் வருகையைப் பாதிக்கும் கட்டண உயர்வு

திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காங்கிரஸில் ஐக்கியம்!
’லார்ட் தாக்குர்’ மீம் அல்ல; அன்பு..! ஷர்துல் தாக்குர் பேட்டி!

நாமக்கல் அரசு விடுதி மாணவியருக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
வீடியோக்கள்

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

பெரம்பூரில் Vijay பிரசாரம்! Vijay full speech | TVK campaign | TN election 2026
தினமணி வீடியோ செய்தி...
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

