பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி பேசிருமோ?: பிக் பாஸ் நிகழ்ச்சியை போட்டுத் தாக்கிய நடிகை 

அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி பேசிருமோ? என்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி காட்டமாக விமர்சித்துள்ளார்.

News image
Updated On :28 ஜூன் 2019, 8:53 pm IST

சென்னை: அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி பேசிருமோ? என்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி காட்டமாக விமர்சித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

இம்முறை மூன்றாவது சீசனில் ஆரம்பத்திலேயே போட்டியாளர்கள் நிறைய சோக கதைகளுடன் அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி பேசிருமோ? என்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி காட்டமாக விமர்சித்துள்ளார்.

Story image

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:

போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை  பிளியபோறீங்க... இப்போவே யாரு எவ்வளோ  சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... இதுக்கு மேலயும்  சோகத்தை பிழியணும்னு  அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு...

இதே சேனல் ல  "கதையல்ல.. னு" சொல்லி ஒரு நிகழ்ச்சி.... வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா  அழவைப்பாங்க...  அதுல ஆரமிச்சது... எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக்  !

எங்க பிளாட்ஸ் ல எல்லா வீட்டுலயும்  குழந்தைகளாம் பாக்குறாங்க.... குழந்தைங்க பாக்குற நிகழ்ச்சியா இது?  Parents, be responsible !

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது போட்டியாளர்களிலொருவரான இலங்கைத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் லோஸ்லியா ஆகும்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.