/

தொடங்கியது சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படம்!

ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது...

News image
Updated On :8 மே 2019, 7:18 am

எழில்

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. 

இந்தப் படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் தேர்வாகியுள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன். இப்படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். கடந்த வருடம் வெளியான பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தார். 

இன்று, பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.