எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

விஜய் சூப்பர் ஆக்டர் இல்லையா? மல்லுவுட்டைச் சுற்றும் சர்ச்சை!

விஜய் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல சூப்பர் ஆக்டரும் தான். அத்துடன் மற்ற எந்த சூப்பர் ஸ்டார்களிடமும் இல்லாத மேன்மையான ஒரு பண்பும் கூட அவரிடம் அதிகப்படியாக இருக்கிறது. அது என்னவென்றால் பணிவு மற்றும்

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:21 pm IST

கேரளாவில் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். காதலுக்கு மரியாதை காலத்தில் இருந்தே தொட்டுத் தொடரும் கதை இது. தொடர்ந்து விஜய் மலையாள சூப்பர் ஆக்டர் மோகன்லாலுடன் இணைந்து ஜில்லா திரைப்படத்தில் நடித்து மலையாளிகளின் செல்லக்குட்டன் ஆனார். போதாக்குறைக்கு தனது தெறி படத்தில் பாதிக்கும் மேல் மலையாள லொகேஷன்களையே தேர்ந்தெடுத்திருந்தார். இப்படி விஜய் மல்லுவுட் மீதான தனது பாசத்தை அவ்வப்போது அடையாளம் காண மறப்பதே இல்லை. அதற்கு ஏற்றாற் போல விஜய் படங்கள் ரிலீஸாகும் போதெல்லாம் அதற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைப்பதும் உண்டு. இந்நிலையில் மலையாளப் படவுலகின் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சித்திக் தமது சமீபத்திய நேர்காணலொன்றில் தெரிவித்த கருத்து தற்போது விஜய் ரசிகர்களிடையே சர்ச்சையாகி இருக்கிறது. 

Story image

சித்திக் தனது நேர்காணலில் தெரிவித்திருந்தது என்னவென்றால்;

மலையாளத்தில் நமக்கு நல்ல திறமையான நடிகர்களாக சூப்பர் ஸ்டார் நடிகர் கம் ஆக்டர்களாக மம்மூட்டியும், மோகன்லாலும் இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும் போது தமிழ்ப் பட உலகில்  அப்படி யாரையும் காண முடியவில்லை. அங்கு நடிகர் விஜயை சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடுகிறார்கள். அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் அவருக்கான நட்சத்திர அந்தஸ்து அப்படி ஒரு பிரமையை ஏற்படுத்தி வைத்திருக்கிறதே தவிர அவரொன்றும் சூப்பர் ஆக்டர் இல்லை எனும்படியாக ஒரு கருத்தை முன் வைத்திருந்தார். இது சித்திக்கின் முடிவு. ஆனால் இதைக் கண்டு விஜஜ் ரசிகர்கள் சும்மா இருப்பார்களோ இல்லையோ மற்றொரு மலையாள வில்லன் & குணச்சித்திர நடிகரான ஹரீஷ் பெராடி, சித்திக்குக்கு எதிராக தமது எதிர்க்கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். 

Story image

அது என்னவென்றால், விஜய் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல சூப்பர் ஆக்டரும் தான். அத்துடன் மற்ற எந்த சூப்பர் ஸ்டார்களிடமும் இல்லாத மேன்மையான ஒரு பண்பும் கூட அவரிடம் அதிகப்படியாக இருக்கிறது. அது என்னவென்றால் பணிவு மற்றும் மனிதாபிமானம். என்று கூறியிருக்கிறார். ஹரீஷைத் தெரியாதவர்கள் மெர்சல் திரைப்படத்தை மீண்டும் பாருங்கள். அல்லது ஆண்டவன் கட்டளையைப் பாருங்கள், அதில் விசாரணை அதிகாரியாக ஒருவர் வருவாரே, அவரே தான்.

Story image

ஹரீஷ் மட்டுமல்ல, இந்த விமர்சனங்களோடு சம்பந்தமே இல்லாத மேலும் சில நடிகர், நடிகைகளுமே கூட விஜயின் பணிவு மற்றும் பதவிசான மனப்பான்மையை புகழ மறந்ததில்லை. அவர்களில் ஒருவர் பாலிவுட் கனவுக்கன்னி காத்ரீனா கைஃப். சமீபத்தில் என் டி டி வி க்கு காத்ரீனா அளித்த நேர்காணலொன்றில், விஜயின் தலைக்கனம் இல்லாத குணத்தைப் பற்றி அவரும் கூட புகழ்ந்திருந்தார்.

Related Article

விஜய் சேதுபதியின் புதிய பட 'பர்ஸ்ட் லுக்' வெளியீடு

தீர்ந்தது மனவருத்தம்: ஒரே மேடையில் இளையராஜா - எஸ்பிபி!

என்னிக்கும் இது வொர்க் அவுட் ஆகும்! இயக்குநர் சிவா பேட்டி (விடியோ)

இந்த வாரம் வெளியாகவுள்ள ஏழு தமிழ்ப் படங்கள்!

பாண்டிராஜ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் அனு இம்மானுவேல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.