ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ரஜினி - சிவா கூட்டணியில் புதிய படமா?: அதிகாரபூர்வ விளக்கம்

இந்த வருட ஆரம்பத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகளை...

News image
Updated On :29 மே 2019, 8:57 am

எழில்

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. அடுத்ததாக, சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்கவுள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார் சிவா. இதனால் ரஜினியின் அடுத்தப் படத்தை சிவா இயக்கவுள்ளதாகப் பரபரப்பு கிளம்பியது. 

ஆனால் இத்தகவலை ரஜினியின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் அகமது மறுத்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

ரஜினி - சிவா தொடர்பான சந்திப்பு குறித்து எழுந்துள்ள ஊகம் தவறானது. இந்த வருட ஆரம்பத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகளைப் பெறுவதற்காக ரஜினியை சிவா சந்தித்தார் என்று அவர் விளக்கமளித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.