மனைவி அளித்த ஊக்கத்தால் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள பிரபல தயாரிப்பாளர்!

என் மனைவி லலிதா தான் இந்தக் கதையை நீங்களே இயக்கிவிடுங்கள் என்று ஊக்கம் அளித்தார். அதனால்...
மனைவி அளித்த ஊக்கத்தால் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள பிரபல தயாரிப்பாளர்!
Updated on
1 min read

முதலில் திரைக்கதை, வசனம் போன்றவற்றில் மட்டும் தான் ஈடுபடலாம் என எண்ணினேன். ஆனால் இப்படத்தைத் தயாரிக்கும் என் மனைவி லலிதா தான் இந்தக் கதையை நீங்களே இயக்கிவிடுங்கள் என்று ஊக்கம் அளித்தார். அதனால் இயக்குநராக முடிவு செய்துவிட்டேன் எனக் கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன். 

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நான்கு புத்தகங்களின் ஆசிரியர், போஃப்டா திரைக்கல்வி நிறுவனத்தின் நிறுவனர், இரு தேசிய விருதுகளைப் பெற்றவர் எனப் பல பெருமைகளைக் கொண்டவர் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன். இந்நிலையில் த்ரில்லர் படம் ஒன்றைத் தான் இயக்கவுள்ளதாக் அறிவித்துள்ளார். கதை - திரைக்கதை - வசனம் என முழுப்பொறுப்புகளையும் தானே ஏற்றுக்கொண்டு தனது முதல் படத்தை இயக்குகிறார் தனஞ்ஜெயன். 

இயக்குநர் ஸ்டான்லி, கருந்தேள் ராஜேஷ் மற்றும் இளைஞர்கள் குழுவுடன் திரைக்கதையை விவாதித்து முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com