
தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சுவின் ஃபீட் அப் வித் ஸ்டார்ஸ் என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகை சமந்தா. அந்நிகழ்ச்சியில், பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொண்டார் சமந்தா.
அப்போது, திருமணத்துக்கு முன்பு சமந்தாவும் நாக சைதன்யாவும் லிவ் இன் உறவில் இருந்தது குறித்துக் கூறினார் லக்ஷ்மி. அவர் கூறியதாவது: நீ இப்போது என்னை எல்லாவற்றையும் சொல்ல வைக்கிறாய். திருமணத்துக்கு முன்பு நீ, லிவ் இன் உறவில் இருந்தது எனக்குத் தெரியும். திருமணத்துக்குப் பிறகு உன் படுக்கையறையில் வித்தியாசமாக இருந்த மூன்று விஷயங்களைச் சொல் என்றார் லக்ஷ்மி, சமந்தாவிடம்.
தலையணை தான் சைதன்யாவின் முதல் மனைவி. நான் முத்தமிட வேண்டும் என்றாலும் தலையணை தான் எங்கள் இருவரின் நடுவிலும் இருக்கும் என்றவர் பிறகு, போதும். நான் நிறைய சொல்லிவிட்டேன் என்றார் சமந்தா.
பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை 2017 அக்டோபரில் திருமணம் செய்துகொண்டார் சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறினார்கள். இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.