செக்ஸ் உறவைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்
செக்ஸ் உறவைத் தீண்டத்தகாததாகக் கருதுவதை விடவும் பொறுப்பான செக்ஸ் உறவுக்குத் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
தான் செக்ஸ் உறவில் உள்ளதை அறிந்த தனது பெற்றோர் அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார் கங்கனா. பிங்க்வில்லா இணையத்தளத்தில் இது குறித்தசெய்தி வெளிவந்துள்ளது. கங்கனா மேலும் கூறியதாவது:
செக்ஸ் உறவு என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமானது. உங்களுக்கு செக்ஸ் உறவு அவசியம் என்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள். அதேசமயம், அதன் மீது அதீத விருப்பத்துடன் இருக்கவேண்டாம். தங்களுடைய பிள்ளைகள் செக்ஸ் உறவில் உள்ளதை எண்ணி பெற்றோர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். பிள்ளைகளும் பொறுப்பான செக்ஸ் உறவில் ஈடுபட வேண்டும். நான் செக்ஸ் உறவில் உள்ளதை அறிந்த தனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தார்கள். தங்களுடைய பிள்ளைகளின் செக்ஸ் உறவுக்குப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.