சென்னை: இயக்குனர் ஸ்ரீகணேஷின் இரண்டாவது படமான குருதி ஆட்டத்தில் அஜித் ரசிகராக நடிகர் அதர்வா நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீகணேஷ். அவர் தற்போது ‘குருதி ஆட்டம்’ என்னும் படத்தினை இயக்கி வருகிறார்.
அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம், மதுரையில் உள்ள கேங்ஸ்டர்களின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் கபடி வீரராக அதர்வா நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.
அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க, ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் குருதி ஆட்டத்தில் அஜித் ரசிகராக நடிகர் அதர்வா நடிக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நிஜத்திலும் அஜித் ரசிகரான அதர்வா சினிமா நிகழ்ச்சி ஒன்றில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படமானது, படத்தில் செட் பிராப்பர்ட்டியாக அதர்வா வீட்டில்இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்து அதர்வா மிகவும் ஆச்சரியப்பட்டார் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


