இரு பாகங்களாக வெளிவரவுள்ள பொன்னியின் செல்வன் படம்: மணி ரத்னம் தகவல்
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கி வருகிறார் இயக்குநர் மணி ரத்னம்.


எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கி வருகிறார் இயக்குநர் மணி ரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன்.
இந்நிலையில் இன்ஸ்டகிராம் வழியாக ரசிகர்களுடன் உரையாடினார் மணி ரத்னம். அப்போது பொன்னியின் செல்வம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த மணி ரத்னம், திரைப்படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் கதை, இரு பாகங்களாக வெளிவரும் என அறிவித்தார்.
மேலும் பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு ஹிந்திப் படமொன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...