மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விக்ரமின் 54-வது பிறந்தநாள்: விடியோ வெளியிட்ட மகன் துருவ்

விக்ரமின் வாழ்க்கைப் பயணத்தை வெளிப்படுத்துவதாக அந்த விடியோ அமைந்துள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 10:45 am

DIN

நடிகர் விக்ரம் இன்று தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதுதொடர்பாக அவருடைய மகன் துருவ் விக்ரம், விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விக்ரமின் வாழ்க்கைப் பயணத்தை வெளிப்படுத்துவதாக அந்த விடியோ அமைந்துள்ளது.

கடந்த வருடம் வெளியான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் துருவ். இதற்காக தன்னுடைய தந்தை நன்றி தெரிவித்துள்ளார். ஒரு மனிதரின் சோர்வில்லா உழைப்பினால் தான் பல சிக்கல்களைத் தாண்டி இந்தப் படம் வெளியானது. அப்பா, உங்களால் தான் பல லட்சம் பேரிடம் நான் அறிமுகமாகியுள்ளேன். நம்பிக்கையை நான் இழந்தபோது அவர்தான் எனக்குப் பாதையைக் காட்டினார். உன் மீது நீயே நம்பிக்கை கொள்ளாமல், முயற்சியை கைவிடும் இடத்தில் வாழ்க்கை உன்னைத் தள்ளும். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்யும்போது எதுவும் சாத்தியமாகும் என்றார். ஆதித்ய வர்மா படம் உங்களால் தான் வெளியானது. ஆதித்யா கதாபாத்திரத்தின் மூலம் நீங்கள் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தீர்கள். உங்கள் கனவு தான் இன்று இந்த இடத்தில் என்னை நிற்கவைத்துள்ளது. உங்கள் கனவு நிறைவேற நான் பாடுபடுவேன். உங்களைப் போல சாதனையாளராக என்னால் மாற முடியாது. ஆனால் இதைப் பெருமையுடன் நான் சொல்வேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.