அழகிப் போட்டியை வெல்ல பணமல்ல, நோக்கமே முக்கியம்: சுஷ்மிதா சென்னின் மிஸ் இந்தியா ‘கவுன்' கதை!

இன்று அழகிப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் மிகவும் விலை உயர்ந்த உடைகளை ஃபேஷன் டிசைனரின் உதவியுடன் வாங்கி...
சுஷ்மிதா சென் (நடுவில்)
சுஷ்மிதா சென் (நடுவில்)

1994-ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் சுஷ்மிதா சென். இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.

அதற்கு முன்பு மிஸ் இந்தியா பட்டம் வென்றார் (இப்போட்டியில் ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்தார்). அப்போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை சுஷ்மிதா சென் பகிர்ந்துள்ளார்.

இன்று அழகிப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் மிகவும் விலை உயர்ந்த உடைகளை ஃபேஷன் டிசைனரின் உதவியுடன் வாங்கி அணிந்துகொள்கிறார்கள். ஆனால், மிஸ் இந்தியா இறுதிச்சுற்றில் சுஷ்மிதா சென் அணிந்த கவுன் உடை, தில்லி சரோஜினி நகர் மார்க்கெட்டில் வாங்கிய துணியில் டெய்லர் தைத்ததாகும்.

மறைந்த நடிகர் ஃபரூக் சயிக் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுபவம் குறித்து சுஷ்மிதா சென் கூறியதாவது:

ஃபேஷன் டிசைனர் பரிந்துரைக்கும் உடைகளை வாங்க எங்களிடம் பணம் இல்லை. எனக்கு நான்கு உடைகள் தேவைப்பட்டன. நாங்கள் நடுத்தரக் குடும்பம் என்பதால் எங்களுடைய எல்லைகளை அறிவோம். இந்தச் சூழலில் என் அம்மா சொன்னார் - அதனால் என்ன, யாரும் நீ என்ன அணிந்து வருகிறாய் எனப் பார்க்க மாட்டார்கள். உன்னைத் தான் அவர்கள் பார்ப்பார்கள் என்றார். எனவே தில்லி சரோஜினி நகர் மார்க்கெட்டில் துணிகளை வாங்கினோம். அருகே ஒரு டெய்லர் இருந்தார். மார்க்கெட்டில் வாங்கி வந்த துணிகளை அவரிடம் கொடுத்து, நன்குத் தைத்துக் கொடுக்கவும். இந்த உடைகள் தொலைக்காட்சியில் வரும் என்றோம். மிஸ் இந்தியா பட்டத்தை வென்றபோது நான் அணிந்திருந்த கவுனை அவர் தான் தைத்துக் கொடுத்தார். அழகிப் போட்டியை வெல்ல பணம் முக்கியமல்ல, நோக்கமே முக்கியம் என்று பேட்டியளித்துள்ளார் சுஷ்மிதா சென். இந்தப் பேட்டியின் விடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com