பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கரோனா நிவாரண நிதி அதிகம் வழங்கியது யார் என்கிற சண்டையில் விஜய் ரசிகர் அடித்துக் கொலை

கரோனா நிவாரண நிதியை அதிகமாகத் தந்தவர் ரஜினியா விஜய்யா என்கிற விவாதம் இருவரிடமும் ஏற்பட்டுள்ளது...

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 8:23 am

DIN

ரஜினி, விஜய் ஆகிய இருவரில் கரோனா நிவாரண நிதிக்காக அதிகத் தொகை கொடுத்தவர் யார் என்கிற சண்டையில் விஜய் ரசிகர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 23,500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினி, விஜய் ஆகிய இருவரில் கரோனா நிவாரண நிதியை அதிகமாகத் தந்தவர் யார் என்கிற சண்டையில் ரஜினி ரசிகரால் விஜய் ரசிகர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான யுவராஜ் (22), நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இவருடைய நண்பரான தினேஷ் பாபு (22), ரஜினியின் ரசிகர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இருவரும் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்துள்ளார்கள். நேற்று இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளார்கள். அப்போது, கரோனா நிவாரண நிதியை அதிகமாகத் தந்தவர் ரஜினியா விஜய்யா என்கிற விவாதம் இருவரிடமும் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிப்போய், கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த தினேஷ் பாபு, யுவராஜைப் பிடித்துக் கீழே தள்ளியுள்ளார். சாலையில் கிடந்த கல் மீது விழுந்த யுவராஜுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, பரிதாபமாகப் பலியானார். இதையடுத்து தினேஷ் பாபு மீது மரக்காணம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.