ஆதிபுருஷ்: 3டி-யில் உருவாகும் பிரபாஸின் புதிய படம்!
பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற பிரபாஸின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற பிரபாஸின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது. இதன் படப்பிடிப்பு 2021-ல் தொடங்கி 2022-ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதற்கு அடுத்ததாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது பிரபாஸின் 21-வது படம். இதில், தீபிகா படுகோனுடன் இணைந்து நடிக்கிறார். தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி ஃபிலிம்ஸின் 50-வது வருடத்தில் இந்த மெகா பட்ஜெட் படம் உருவாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...