வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்: பிரேமலதாஒருநாள் மழைக்கே சென்னை மாநகரமே தத்தளிக்கிறது: தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்

சைக்கிளில் சென்ற நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு

இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள், அவரிடமிருந்த செல்போனை...

Updated On :

நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 

2013-ல் கடல் படத்தின் மூலமாகத் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் கெளதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் வெளியானது.

இந்நிலையில் இன்று காலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார் கெளதம் கார்த்திக். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள், அவரிடமிருந்த செல்போனைப் பறித்துச் சென்றார்கள். 

இதையடுத்து இச்சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கெளதம் கார்த்திக். இதன் அடிப்படையில் காவலர்கள் விசாரணை செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.