/

காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சினிமாவில் நடிக்கும் புதுமுக நடிகை

தனது கன்னட படமான ஓ-வின் மூலம் பாலிவுட் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் கிரிதேவா ஹாசன்.

News image
Updated On :6 ஜனவரி 2020, 10:00 am

தனது கன்னட படமான ஓ-வின் மூலம் பாலிவுட் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் கிரிதேவா ஹாசன். இந்த அடையாளத்துடன் பாலிவுட்டில் ஹிந்தி இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். ஒய் என பெயரிடப்பட்ட அவரது புதிய ஹிந்திப்படம்,  சைக்காலஜிகல் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் லியோனிலா என்ற புதுமுக நடிகையை அறிமுகம் செய்துள்ளார் கிரிதேவா ஹாசன். மங்களூருவிலிருந்து பாலிவுட்டுக்கு வந்துள்ள லியோனிலா, தனது பிற வேலைகளைப் போல நடிப்பையும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

சேதக் குலால் இயக்கத்தில் ஜோயல் ரெபெல்லோ பாடிய 'ஆப் குச் ஐசா’ என்ற ஹிந்தி இசை ஆல்பத்தில் லியோனிலா நடித்துள்ளார்.  ஒய் படத்தில் இவருக்கு ஜோடியாக யுவன் நடிக்கிறார். கமல் கிமிரே இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ராக்கெட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ராக்ஸி, மது ஜி எம், மற்றும் டாக்டர் அஜித் ஆகியோர் இணைந்து தயாரித்த இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தைத் தயாரிப்பாளர்கள் சென்ஸாருக்கு அனுப்பவிருக்கும் நிலையில், படத்தின் முதல் தோற்றத்தைப் பகிர்ந்துள்ளனர், விரைவில் ஒரு டீஸர் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.

கார்த்திக் மல்லூர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, மாரு பிரதர்ஸ் இசையமைக்கிறார்கள். கிறிஸ்டோபர் லீ மற்றும் வினோத் பசவராஜ் பின்னணி இசை அமைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.