/

தர்பார் வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்! (விடியோ)

நாளை வெளியாகவுள்ள தர்பார் படம் வெற்றியடைவதற்காக...

News image
Updated On :8 ஜனவரி 2020, 12:20 pm

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள தர்பார் படம் வெற்றியடைவதற்காக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி  கோவில் முன்பு அலகு குத்தியும் மண் சோறு சாப்பிட்டும் ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இதன் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.