பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பேர், புகழ், நல்ல வசதியுடன் வாழ்வதற்குக் காரணம் பாலசந்தர்: ரஜினி உருக்கம்

அந்த மாதிரி ஒரு கம்பீரம் கேபி சாரிடம் இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை.

News image
Updated On :9 ஜூலை 2020, 7:15 am

DIN

கே. பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

கவிதாலயா நிறுவனம், யூடியூபில் ரஜினியின் கருத்துகளை விடியோவாக வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி கூறியிருப்பதாவது:

கே. பாலசந்தர் சார் என்னை அறிமுகம் செய்திருக்கா விட்டாலும் நான் நடிகராகியிருப்பேன். கன்னட மொழியில் வில்லன் கதாபாத்திரத்திலோ, சின்னச் சின்னக் கதாபாத்திரங்களிலோ நடித்து சிறிய நடிகராயிருந்திருப்பேன். ஆண்டவன் புண்ணியத்தில் பேரும் புகழுடனும் நல்ல வசதியுடன் வாழ்வதற்குக் காரணமே, கே. பாலசந்தர் சார். என்னை அவர் தேர்ந்தெடுத்து எனக்குப் பெயர் வைத்து என்னுடைய பலவீனங்கள் எல்லாவற்றையும் நீக்கி, என்னிடமுள்ள ப்ளஸ்ஸான விஷயங்களை எனக்கே காண்பித்து என்னை ஒரு முழு நடிகனாக்கி நாலு படங்களிலும் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து ஒரு நட்சத்திரமாகத்தான் என்னைத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். 

என் வாழ்க்கையில் அப்பா, அம்மா, என்னை வளர்த்து ஆளாக்கிய அண்ணன், பாலசந்தர் ஆகிய நால்வரும் தெய்வங்கள். எனக்கு மட்டுமல்ல, எத்தனையோ நடிகர், நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார். அவரால் வாழ்ந்தவர்கள் பலர். தன் வாழ்நாளில் படம் இயக்கி, தயாரித்து சின்னத்திரையிலும் ஈடுபட்டு எத்தனையோ பேருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்தார். எத்தனையோ இயக்குநர்களிடம் வேலை செய்துள்ளேன், ஆனால் கேபி சார் செட்டுக்குள் வந்தால் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை விடுங்கள், செட்டின் மேலே நிற்கும் லைட்மேன் கூட எழுந்து நின்று வணக்கம் சொல்வார். அந்த மாதிரி ஒரு கம்பீரம் கேபி சாரிடம் இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குநராக... எல்லாவற்றையும் சரியாகச் செய்தார். இன்னும் சிறிது நாள்கள் அவர் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.