அசோக் செல்வனின் புதிய படம்
ஓ மை கடவுளே-க்குப் பிறகு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசோக் செல்வன்.


ஓ மை கடவுளே-க்குப் பிறகு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசோக் செல்வன்.
சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே படம் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் அசோக் செல்வனுக்கும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதன்மூலம் அவருடைய அடுத்த படங்களின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் அசோக் செல்வனின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்வாதினி என்கிற புதிய இயக்குநருடன் இணையவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வனின் ஜோடியாக நிஹாரிகா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்கிற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் தவிர ரெட் ரம், நெஞ்சமெல்லாம் காதல் என மேலும் இரு படங்களில் நடிக்கிறார் அசோக் செல்வன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...