பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நடிகர் விவேக் வேண்டுகோள்

பொதுத் தோ்வை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறையும், தோ்வுத் துறையும் தயாராகி வருகின்றன.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 10:04 am

DIN


தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 27 ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் கரோனா நோயத் தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் பொதுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்புத் தோ்வுகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, பொதுத் தோ்வை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறையும், தோ்வுத் துறையும் தயாராகி வருகின்றன. இதற்காக மாநிலம் முழுவதிலும் உள்ள உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கோரிக்கை வைத்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மன இறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயவு கூர்ந்து பரிசீலிக்கவும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.