முதல் படத்திலிருந்தே உங்களைப் பிடிக்கும்: கமல் பாராட்டு
உங்களுடன் இணைந்து நடித்தபோது உங்களை இன்னும் பிடித்தது. நீண்ட நாள் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்...


கமலிடம் பாராட்டு பெறுவது அதுவும் நடிப்பு தொடர்பாகப் பாராட்டு பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல.
ஆனால் மோகன் லாலின் நடிப்பை அவருடைய முதல் படத்திலிருந்தே ரசித்து வந்துள்ளார் கமல்.
இன்று 60-வது பிறந்த நாளைக் கொண்டாடும் மோகன் லாலுக்கு வாழ்த்து சொல்லும்போது இதை வெளிப்படுத்தியுள்ளார்.
ட்விட்டரில் கமல் கூறியதாவது:
உங்களுடைய முதல் படத்திலிருந்தே உங்களை எனக்குப் பிடிக்கும். அதுவும் ஒவ்வொரு திருப்பத்திலும் எதிர்ப்பாளர்கள் பதுங்கியிருக்கும்போது தொடர்ந்து தரமான நடிப்பை வெளிப்படுத்தும் உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டுள்ளேன். உங்களுடன் இணைந்து நடித்தபோது உங்களை இன்னும் பிடித்தது. நீண்ட நாள் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மோகன் லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 உருவாகவுள்ளது. தன்னுடைய பிறந்த நாளான இன்று இத்தகவலை வெளியிட்டுள்ளார் மோகன் லால். ரூ. 50 கோடி வசூலைப் பெற்ற முதல் முதல் மலையாளப் படம் என்கிற பெருமை த்ரிஷ்யம் படத்துக்கு உண்டு. இதனால் இதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...