கமல் வாழ்த்து: அட்லி நெகிழ்ச்சி
அந்தகாரம் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் கமல் ஹாசன்


ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, 2017-ல் சங்கிலி புங்கிலி கதவ தொற என்கிற படத்தைத் தயாரித்தார். இதையடுத்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாக அந்தகாரம் என்கிற படத்தை வெளியிட்டுள்ளார்.
விக்னராஜன் இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை - பிரதீப் குமார். அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிருஷ்ணன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல், குமார் நடராஜன் போன்றோர் நடித்துள்ளார்கள்.
அந்தகாரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 24-ல் நேரடியாக வெளியானது.
இந்நிலையில் அந்தகாரம் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் கமல் ஹாசன். இச்சந்திப்பின் புகைப்படங்களைப் பகிர்ந்து அட்லி கூறியதாவது:
கமல் ஹாசன் சாரிடம் அந்தகாரம் படக்குழு வாழ்த்துகளைப் பெற்றுள்ளது. எங்களுடன் எப்போதும் இருந்து ஆதரவளிப்பதற்கு நன்றி. புதிதாக ஒன்றைச் செய்ய உங்களுடைய வார்த்தைகள் ஊக்கமாக இருக்கும் என்றார்.
அட்லியின் மனைவியும் நடிகையுமான ப்ரியா கூறியதாவது:
நன்றி கமல் ஹாசன் சார். அனைவருக்கும் மறக்க முடியாத நாள் இது. ஆசிர்வதிக்கப்பட்டது போல உணர்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...