அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நடிகை தமன்னாவுக்கு கரோனா பாதிப்பு: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்!

மருத்துவர்களின் கண்காணிப்புக்குப் பிறகு தற்போது மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளேன்...

News image
Updated On :6 அக்டோபர் 2020, 9:10 am

DIN

பிரபல நடிகை தமன்னா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2006-ல் கேடி படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் தமன்னா. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஆக்‌ஷன் படம் சமீபத்தில் வெளியானது. 

நடிகை தமன்னாவின் பெற்றோர் கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் தமன்னாவும் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:

நானும் எனது படப்பிடிப்புக் குழுவினரும் பாதுகாப்பாக இருந்தும் துரதிர்ஷ்டவசமாகக் கடந்த வாரம் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனைகளின் முடிவில் எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நானாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். மருத்துவர்களின் கண்காணிப்புக்குப் பிறகு தற்போது மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளேன். 

கடந்த ஒரு வாரமாக நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டாலும் தற்போது நலமாகவே உள்ளேன். இதிலிருந்து முழுவதுமாக மீண்டுவிடுவேன் என நம்பிக்கையுடன் உள்ளேன். அறிவுரையின்படி தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவருடைய அன்புக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.