போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஹிந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையின்போது, போதைப் பொருள் கும்பலின் பின்னணி தெரிய வந்ததையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவலர்களும் (என்சிபி) விசாரணை நடத்தினர். இதில், போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பிருப்பதாக நடிகர் சுசாந்த்தின் காதலியும் நடிகையுமான ரியா, அவருடைய சகோதரர் ஷோவிக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, இருவரும் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா, அவருடைய சகோதரர் ஷோவிக் ஆகியோரது நீதிமன்றக் காவல் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்நிலையில் நடிகை ரியாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆற்காட்டில் தீ விபத்து! கணவன்- மனைவி பலி!

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


