எஸ்.ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் படத்தில் தான்யா ரவிசந்திரன்
தான்யா ரவிசந்திரன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் நடிக்கிறார்.


2012-ம் வருடம் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் என்கிற படத்தில் நடித்தார் சசிகுமார். நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தப் படம். சுந்தரபாண்டியனுக்குப் பிறகு இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கினார் பிரபாகரன். இதையடுத்து சசிகுமாரும் பிரபாகரனும் கொம்பு வச்ச சிங்கம் என்கிற படத்தின் மூலம் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்கள்.
இந்நிலையில் சொந்தமாக பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்ஷன்ஸ் என்றொரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன். இந்நிறுவனத்தின் முதல் படத்தை அவரே இயக்குகிறார்.
தான்யா ரவிசந்திரன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் நடிக்கிறார். ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ்ட் வெங்கட், ராம்நாத் ஷெட்டி, சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் போன்றோரும் நடிக்கிறார்கள்.
எஸ்.ஆர். பிரபாகரன் - தான்யா ரவிசந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...