உலக சினிமாவின் மகத்தான கலைஞன்: கமலை வியந்து பாராட்டும் பிரிதிவிராஜ்
சில படங்கள் மட்டுமே மைக்கேல் மதன காமராஜன் போல படம் பார்க்கும்போது அளவில்லாத சந்தோஷத்தை அளிக்கும்...


மைக்கேல் மதன காமராஜன் படம் போல சில படங்களைப் பார்க்கும்போது மட்டுமே நமக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்படும் எனப் பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ் ட்வீட் செய்துள்ளார்.
1990-ல் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படம், இன்றுவரைக்கும் அதன் நகைச்சுவைக் காட்சிகளுக்காக நினைவுகூரப்படுகிறது. கிரேசி மோகனின் வசனமும் இளையராஜாவின் பாடல்களும் படத்துக்குக் கூடுதல் பலங்கள்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ், இந்தப் படம் ட்விட்டரில் கூறியதாவது:
சில படங்கள் மட்டுமே மைக்கேல் மதன காமராஜன் போல படம் பார்க்கும்போது அளவில்லாத சந்தோஷத்தை அளிக்கும். உலக சினிமாவின் மகத்தான கலைஞன், கமல். நடிகை ஊர்வசி ஜாம்பவான். பின்னிரவில் மனைவியுடன் இப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...