எவனென்று நினைத்தாய்: கமல் படத்தலைப்பு இது அல்ல!
மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்.


மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி என்கிற படத்தை இயக்கி அதை சூப்பர் ஹிட்டாக்கியதால் அவருக்குத் தமிழ்த் திரையுலகில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் கமலின் 232-வது படத்தை எழுதி இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இசை - அனிருத்.
2021 ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படம் பற்றிய அறிவிப்பில் எவனென்று நினைத்தாய் என்கிற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதுதான் படத்தலைப்பு என்று பலரும் நினைத்துவிட்டார்கள்.
ஆனால் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கமல் ஹாசன் 232 என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளது இந்தப் படைப்பு எனச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், எவனென்று நினைத்தாய் என்பது கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு அல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...