டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு நேர்ந்த விபத்து : இப்பொழுது எப்படி இருக்கிறார் ?

படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து இயக்குநர் சேரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 11:19 am

DIN

படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து இயக்குநர் சேரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இயக்குநரும் நடிகருமான சேரன் யதார்த்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். இவர் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்ச்சைகளுக்கு ஆளானார். இருப்பினும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. 

இதனையடுத்து அவர் தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் தற்போது ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்ததாக கூறப்பட்டது. அவர் உயரத்தில் இருந்து கீழே விழும் விடியோ காட்சிகள் இணையத்தில் பரவலாகி வருகிறது. 

இந்த நிலையில் இயக்குநர் சேரன் தனது சுட்டுரைப் பக்கத்தில், ''நலம் விசாரிக்கும் நண்பர்களுக்கு வணக்கம். நான் லமாக இருக்கிறேன். பயம் ஒன்றும் இல்லை. உங்களின் அன்பால், கடவுள் அருளால் காப்பாற்றப்பட்டேன் என்பதே சரி. அனைவரும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருக்கவும், நன்றி'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.