3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அப்போ உண்மையில்லையா? - மறுப்பு தெரிவித்த செல்வராகவன்: ஏமாற்றத்தில் ரசிகர்கள்

தன்னைப் பற்றி வெளியான செய்திக்கு இயக்குநர் செல்வராகவன் தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக மறுப்பு தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :8 ஆகஸ்ட் 2021, 11:21 am

DIN

தன்னைப் பற்றி வெளியான செய்திக்கு இயக்குநர் செல்வராகவன் தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக மறுப்பு தெரிவித்துள்ளார். 

இயக்குநர் செல்வராகவன் தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து 'சாணிக் காயிதம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இதனையடுத்து அவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. நடிகர் விஜய் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிக்கும் காட்சிகளை காண ரசிகர்களிடையே மிகுந்த ஆவல் உருவாகியுள்ளது. 

இது மட்டுமல்லாம் அவரது தம்பியும் நடிகருமான தனுஷை வைத்து அவர் இயக்கவுள்ள 'நானே வருவேன்' என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். 

இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2 பாகத்தின் அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. இந்தப் படம் வருகிற 2024 ஆம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது.

Story image

இந்த நிலையில் ஒரு செய்தி நிறுவனம், ஆயிரத்தில் ஒருவன் 2 படம் கைவிடப்பட்டதாகவும், அந்தப் படத்தின் முன் கட்ட தயாரிப்பு பணிக்காக கோடிக்கணக்கில் செலவிடப்பட்டதாகவும் கூறியிருந்தது.

இதனைப் பகிர்ந்த இயக்குநர் செல்வராகவன், ''எப்பொழுது முன் கட்டப் பணிகள் நடைபெற்றது என சொல்ல முடியுமா ? யார் அந்த தயாரிப்பாளர் ? உங்களுக்கு தகவல் அளித்தவர்களைக் கேளுங்கள்'' என்றார். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் 2 கைவிடப்பட்டதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவிக்காததால் அது உண்மையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.