
பட்டியலின சமூகத்தினரை தவறாக பேசிய நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
'தானா சேர்ந்த கூட்டம்', '8 தோட்டாக்கள்', 'போதை ஏறி புத்தி மாறி' போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடும் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. நடிகர் விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் குறித்து தவறான கருத்துக்களை அவர் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், பட்டியலின சமூகத்தினர் குறித்து தவறாக பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர், மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.