மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் : அவரது தங்கை உருக்கமான பதிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரவண விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டதாக அவரது தங்கை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 7:33 am

பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரவண விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டதாக அவரது தங்கை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடருக்கென பிரத்யேகமாக ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்த சித்ரா கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

Story image

மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகிய நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசப் போராட்டத்தை பேசும் இந்தத் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் சுவாரசியமான திருப்பங்களுடன் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது.

சமீபத்தில் தொடரில் கண்ணனின் திருமண நிகழ்வு அவர்களது குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் குறித்த கருத்துகளை ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இந்தத் தொடரில் கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரமிற்கு திருமண காட்சிகள் படமாக்கப்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அவரது தங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் திருமண நிகழ்வில் கண்ணன் வாகனம் ஓட்டும் காட்சி படமாக்கப்பட்ட போது விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் வலியையும் பொருட்படுத்தாது அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

Story image

படக்குழுவினரிடம் தனக்கு காயம் ஏற்பட்டதை அவர் சொல்லவில்லை. வலி இருந்தும் அந்த காட்சியில் கண்ணன் சிறப்பாக நடித்தார். ஒரு தங்கையாக உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அண்ணா. தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளியுங்கள்'' என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.