பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விரைவில் சின்னத்திரையில் நடிகை நயன்தாரா - எந்த தொலைக்காட்சியில் தெரியுமா ?

நடிகை நயன்தாரா நீண்ட இடைவேளைக்குப் பிறகு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 12:02 pm IST

நடிகை நயன்தாரா நீண்ட இடைவேளைக்குப் பிறகு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளதாக வெளியான செய்தியினால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நயன்தாரா கடந்த பல வருடங்களாக தன் பட இசை வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்வது இல்லை. மேலும், எந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என எதற்கும் பேட்டியளிப்பதில்லை. எந்த சமூக வலைதளங்களிலும் அவருக்கு கணக்கு இல்லை. எனவே திரைப்படங்களில் மட்டுமே அவரை, அவரது ரசிகர்கள் காண முடியும் என்ற நிலை இருந்தது. 

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை நயன்தாரா விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்துள்ளாராம். பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Story image

விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெற்றிக்கண்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் இவர் ரஜினிகாந்த்துடன் 'அண்ணாத்த', விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் இணைந்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.