அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

'பீஸ்ட்டும் சிங்கமும் இணைந்தால்...?' - படப்பிடிப்புத் தளத்தில் விஜய் மற்றும் தோனியுடன் இயக்குநர்

நடிகர் விஜய் மற்றும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியுடன் இருக்கும் புகைப்படங்களை இயக்குநர் நெல்சன் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 11:28 am

DIN

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி, 'பீஸ்ட்' படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விஜய்யை சந்திக்க வந்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கான தூதுவராக நடிகர் விஜய் இருந்தார். அப்போது தோனியுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், தற்போது 'பீஸ்ட் 'படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒப்பிட்டு 13 வருடங்கள் கடந்தும் இருவரும் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் 'பீஸ்ட்' பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர் விஜய் மற்றும் தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து, ''பீஸ்ட்' மற்றும் சிங்கம். இது டபுள் பீஸ்ட் மோட்'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.