அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

10 லட்சம் லைக்ஸ்களை பெற்ற விஜய் - தோனி புகைப்படம்

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்

News image
தோனியுடன் நடிகர் விஜய் சந்திப்பு
Updated On :13 ஆகஸ்ட் 2021, 10:04 am

DIN

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி, 'பீஸ்ட்' படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விஜய்யை சந்திக்க வந்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய்-தோனி இருவரும் சேர்ந்து இருக்கும் படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பகிர்ந்திருந்தனர். முழுதாக 24 மணி நேரம் கூட கடக்காத நிலையில் தற்போது  10 லட்சம் விருப்பங்களைப் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இதனால்   விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.