நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இணையும் டிக் டாக் பிரபலம்
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் பரவிவருகிறது.


தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் பரவிவருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் 3 ஆம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பிற்கு சென்னை வந்த கிரிக்கெட் வீரர் தோனி, அருகில் 'பீஸ்ட்' படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்து நடிகர் விஜய்யை சந்தித்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க | செப்டம்பர் 10-ல் வெளியாகிறது சந்தானத்தின் 'டிக்கிலோனா'
நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இவர் டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அட்லி - ஷாரூக்கான் படம்: நயன்தாராவுடன் இணைந்த மற்றொரு கதாநாயகி
பீஸ்ட் பட பூஜையின் போதே இந்தத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நடிகை அபர்ணா தாஸ் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதார். ஆனால் அவர் எந்த வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...