வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கவுண்டமணியுடன் இணையும் சிவகார்த்திகேயன்?: வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் கவுண்டமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சிவகார்த்திகேயன் பகிர, இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 9:11 am

DIN

நடிகர் கவுண்டமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சிவகார்த்திகேயன் பகிர, இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படம் ஓடிடியில் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டதால் இந்தப் படம் திரையரங்கிலேயே வெளியாகலாம் என்ற எதர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 

சிவகார்த்திகேயன் தற்போது' டான் 'படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பொள்ளாச்சி மற்றும் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

Story image

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் கவுண்டமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, ''நடிகர் கவுண்டமணியுடன் ஒரு சந்திப்பு. எப்பொழுதும் நினைவில் நிற்கும் தருணம்.'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு நட்பு ரீதியிலான சந்திப்பா ? டான் படத்தில் கவுண்டமணி நடிக்கிறாரா ? என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன, 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.