கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகிறது 'சாணிக் காயிதம்'

இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வந்த 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

News image
பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகிறது 'சாணிக் காயிதம்'
Updated On :24 ஆகஸ்ட் 2021, 6:45 am

DIN

இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வந்த 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அதன் வெளியீடு உரிமையை பிரபல ஓடிடி தளம் வாங்கியிருக்கிறது.

'ராக்கி' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படத்தை இயக்குகிறார். ஆக்சன் , த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பைப் பெற்றது.

டப்பிங் பணியில் செல்வராகவன் 

டப்பிங் பணியில் செல்வராகவன் 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன்  இப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் அடுத்ததடுத்த சில படங்களில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட் ' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் செல்வராகவன்.

தற்போது 'சாணிக் காயிதம்' படப்பிடிப்பு நிறைவைத் தொடர்ந்து டப்பிங் பணிகள் ஆரம்பமாகி இருப்பதால்   அதில் செல்வராகவன் பங்கேற்று வரும் நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியீடு செய்ய படக்குழு முடிவு செய்திருந்தார்கள்.

இந்நிலையில் இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் வெளியிடுகிறது. வெளியீடு தேதி குறித்த தகவல் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.