
சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 'டான்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, பால சரவணன், சிவாங்கி, மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதையும் படிக்க| 'விக்ராந்த் ரோனா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இதன் ஒரு பகுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தாவுடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் காதலர் தினத்தை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் 'எதிர் நீச்சல்' படமும், விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' படமும் ஒரே நாளில் வெளியாகின. அதுபோலவே 'ரெமோ' மற்றும் றெக்க படங்களும் ஒரே நாளில் வெளியாகின. இதனையடுத்து எம்ஜிஆர் - சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் - கமல்ஹாசன், விஜய் - அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி ஆகியோரும் இடம் பெறுவர் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது விஜய் சேதுபதி முற்றிலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.