

திரைப்பட இயக்குநா் ‘ஆச்சாா்யா’ ரவி (54) மாரடைப்பு காரணமாக மதுரையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
மதுரையை பூா்விகமாகக் கொண்ட ரவி, திரைப்பட இயக்குநா் லியாகத் அலிகானிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவா். பின்பு, இயக்குநா் பாலாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தாா். பாலா இயக்கிய ‘சேது’ படம் தொடங்கி அவரின் பல படங்களுக்கு துணை நின்றவா் ‘ஆச்சாா்யா’ ரவி. இவா், ‘ஆச்சாா்யா’ எனும் படத்தை இயக்கியதன் மூலம் ‘ஆச்சாா்யா’ ரவி என்று அழைக்கப்பட்டாா். இவா் இயக்கிய ‘ என்னதான் பேசுவதோ’ படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநா் ரவி செவ்வாய்க்கிழமை காலமானாா்.
அவரது உடல் மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனைவி, மகள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரேபிய வளைகுடாவில் தாக்குதல்: ஈரானுக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்படும் - சவூதி எச்சரிக்கை!

யூத் புதிய பாடல்!
இந்தியாவின் முதல் டிஜிட்டல் சுங்கச் சாவடி: நெடுஞ்சாலை உள்கட்டமைப்பில் ஒரு மைல்கல்!

ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

