தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திரையரங்கில் இணைந்து படம் பார்த்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா : என்ன படம் தெரியுமா?

திரையரங்கில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து படம் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

News image
Updated On :29 டிசம்பர் 2021, 9:06 am

DIN

ரௌடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து வெளியிட்ட படம் 'ராக்கி'. இந்தப் படம் திரையரங்குகளில் கடந்த 23 ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

இந்தப் படத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா ரவி, ரோகினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கினார். இந்தப் படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், தர்புகா சிவாவின் இசையும் பாராட்டுக்களை குவித்தன. 

Story image
Story image

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்துக்காக இயக்குநர் பாரதிராஜா மற்றும் வசந்த் ரவியை நேரில் சந்தித்து பாராட்டினார். 

Story image
Story image

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ராக்கி படத்தை பார்த்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.